கோவில் திருவிழாவின்போது பைக் சாகசம்: விபத்தில் 2 நண்பர்கள் பலி

கோவில் திருவிழாவின்போது பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 நண்பர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.

Update: 2024-05-25 00:24 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள குழைக்கநாதபுரத்தை சேர்ந்த இளைஞன் ஜீவா என்ற ஜீவரத்தினம் (வயது 22). இவரும் அதேபகுதியை சேர்ந்த பிரதீப்குமாரும் (23 வயது) நண்பர்கள்.

இந்நிலையில், குழைக்கநாதபுரத்தில் உள்ள கட்டையன் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவில் கலந்து கொள்ள 2 பேரும், மற்றொரு நண்பரான ஆறுமுகநேரியை சேர்ந்த பூபதிராஜாவை (22) அழைத்துள்ளனர். 3 பேரும் நேற்று முன்தினம் இரவு கொடை விழாவில் கலந்து கொண்டு விட்டு பைக்கில் சுற்றியுள்ளனர். இரவு 11.30 மணியளவில் நெல்லை - திருச்செந்தூர் ரோட்டில் 3 பேரும் பைக்கில் சாகசம் செய்துள்ளனர். இதில், ஜீவா, பிரதீப் ஓட்டிய பைக்குள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பூபதிராஜா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் படுகாயமடைந்த பூபதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்