வாடகைக்கு வீடு தர மறுத்தவரை தாக்கிய 2 பேர் கைது
நெல்லை டவுனில் வாடகைக்கு வீடு தர மறுத்தவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
நெல்லை டவுன் பாறையடி தெருவை சேர்ந்தவர் சவுந்தர் (வயது 37). தொழிலாளி. இவரிடம், அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (24), மணிகண்டன் (25) ஆகியோர் வீடு வாடகைக்கு கேட்டு உள்ளனர். ஆனால் சவுந்தர் அவர்களுக்கு வீடு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து சவுந்தரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.