ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-10-01 20:01 GMT

அஞ்சுகிராமம், 

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குண்டர் சட்டம் பாய்ந்தது

அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் ரஸ்தாகாடு ஊரை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜா. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பால்குளம் நாற்கர சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை 2 பேர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இந்த கொலை முயற்சி குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக லீவுபுரத்தைச் சேர்ந்த ராபர்ட் சிங் (வயது21), வட்டக்கோட்டையை சேர்ந்த பெலிக்ஸ் (27) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வேறு சில வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் அரவிந்தின் உத்தரவின் பேரில் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    
Show comments

மேலும் செய்திகள்