சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் ஒரு வாலிபர், ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகேயுள்ள பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தர்மர் மகன் பார்வதிமுத்து (வயது 28), ஒரு சிறுமியை கடந்த 19.2.2012 அன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ப்ரீத்தா, குற்றம் சாட்டப்பட்ட பார்வதிமுத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.