கந்து வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

கந்து வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது;

Update:2023-04-17 00:15 IST

கோவை

கோவை ரத்தினபுரி டி.வி.எஸ். நகர் இ.பி. காலனியை சேர்ந்தவர் கவுரிசங்கர்(வயது 38). தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கோவில்பாளையம் எஸ்.எஸ்.குளத்தை சேர்ந்த சம்ஜித்(45) என்பவரிடம் ரூ.1 லட்சம் பணத்தை 8 சதவீத வட்டிக்கு வாங்கினார். அதன் பின்னர் அவர் வட்டி மற்றும் அசலுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் மீண்டும் சம்ஜித் கூடுதல் வட்டி கேட்டு கவுரி சங்கரை மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு பூ மார்க்கெட் தேவாங்க பேட்டையை சேர்ந்த பிரதீப் (37), என்பவரும் உடந்தையாக செயல்பட்டுள்ளார். இது குறித்து கவுரி சங்கர் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்துவட்டி கேட்டு மிரட்டிய சம்ஜித் மற்றும் பிரதீப் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்