மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்திய 2 பேர் கைது
நெமிலி அருகே மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள சிறுணமல்லி பகுதியில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புத்தேரியில் இருந்து சிறுணமல்லி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புத்தேரி கிராமத்தை ேசர்ந்த பாண்டியன் (வயது 41), சிறுணமல்லி கிராமத்தை ேசர்ந்த அம்சா (42) என்பதும், மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 13 மதுபாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.