தமிழகத்தில் 15.5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தமிழகத்தில் 15.5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update:2026-01-02 23:11 IST

கோப்புப்படம்

சென்னை,

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒற்றை பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தீவிர சோதனையை நடத்தி வருகிறது.

தெருவோர வியாபாரிகள், கடைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தனைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் சோதனையை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் நடைபெற்ற சோதனையில் 2,553 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. 15.56 டன் தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த நபர்களுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.

ஒற்றை பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபட்ட 290-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்தில் 13 தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 



Tags:    

மேலும் செய்திகள்