விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.;
விருதுநகர்,
விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் கோட்டைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 36) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (40) ஆகிய 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களுக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.