ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 2 சுற்றுலா பஸ்கள் பறிமுதல்

ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 2 சுற்றுலா பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update:2023-08-26 01:20 IST


ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 2 சுற்றுலா பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முறையான அனுமதி இல்லாமல் சுற்றுலா பஸ்கள் இயக்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது திருப்பத்தூர் - சிங்காரப்பேட்டை சாலையில் விஷமங்கலம் அருகே முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 2 சுற்றுலா பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பஸ்கள் மீது சந்தேகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஸ்சின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்