தக்காளி–முட்டை மீது அமர்ந்து 4 வயது சிறுமி யோகா உலக சாதனை முயற்சியாக பதிவு

விவசாயிகள் பிரச்சினைகள் தீரவேண்டும், மழை பெய்யவேண்டும், மரம் வளர்ப்பதை வலியுறுத்தும் விதமாக சென்னை அண்ணாநகரை சேர்ந்த சிறுமி ஹர்ணிகாஸ்ரீ (வயது 4) சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் யோகா செய்து அசத்தினார்.

Update: 2017-04-27 20:45 GMT

சென்னை,

5 கிலோ தக்காளி, 36 முட்டைகள் மீது அமர்ந்து சிறுமி பத்மாசனம் யோகாவில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிறுமியின் பெற்றோர் சுந்தரமூர்த்தி–சுபாஷிணி, அரிமா மாவட்ட கவர்னர் கே.எஸ்.பாபாய், ஆர்கிட் அரிமா சங்க நிறுவனர் நாதன், தலைவர் மீனாட்சி சுந்தரம், பயிற்சியாளர் யோகா சுரேஷ்குமார், கனடா நாட்டை சேர்ந்த யுனிவர்சல் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் பொறுப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஹர்ணிகாஸ்ரீ–யின் தந்தையும், ‘எஸ்’ பவுண்டே‌ஷன் தலைவருமான சுந்தரமூர்த்தி கூறுகையில், ‘‘உலக சாதனை முயற்சியாகவும், நாட்டு நலனை வலியுறுத்தும் விதமாகவும் எனது மகள் யோகா செய்திருக்கிறாள். அவளால் 22 நிமிடங்கள் இந்த நிலையில் யோகா செய்யமுடியும். நிச்சயம் எனது மகள் உலக சாதனை படைப்பாள் என்று நம்புகிறேன்’’, என்றார்.

ஹர்ணிகாஸ்ரீ–யின் இந்த யோகா உலக சாதனைக்கான முயற்சியாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்