தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-23 19:15 GMT
சென்னை, 

லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:–

லட்சதீவு பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 2 செ.மீ. மழையும், ராமேசுவரம், தென்காசி, நாங்குநேரி, முதுகளத்தூர் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு செ.மீ. மழையும் பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்