வருணா கப்பலை இலங்கை கடற்படைக்கு தாரை வார்க்க கூடாது ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வருணா கப்பலை இலங்கை கடற்படைக்கு தாரை வார்க்க கூடாது ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-11-23 19:30 GMT
சென்னை, 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசு நம் நாட்டின் கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட வருணா ரோந்து கப்பலை இலங்கை கடற்படைக்கு பரிசாக அளிப்பது ஏற்புடையதல்ல. வருணா கப்பலை இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அரசு அதற்குண்டான தீவிர முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அதனை விட்டு விட்டு இலங்கை அரசுக்கு தற்போது நம் நாட்டின் வருணா கப்பலை வழங்க முடிவு எடுத்திருப்பது முற்றிலும் தவறானது. இதனை பரிசீலனை செய்ய வேண்டும். எனவே தமிழக மீனவர்களின் உயிருக்கும், மீன்பிடிச் சாதனங்களுக்கும் கேடு விளைவிக்கின்ற இலங்கை கடற்படையின் தொடர் அராஜகம் நிற்கும் வரை மத்திய பா.ஜ.க. அரசு இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்