நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் பட்ஜெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் பட்ஜெட் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்து உள்ளார். #EdappadiPalanisamy #Budget2018;
சென்னை
பாராளுமன்றத்தில் இன்று 2018-19 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பை அருண்ஜெட்லி வெளியிட்டார். இதற்கு எதிர்கட்சிகள் பெரும்பாலும் ஏமாற்றத்திற்கான பட்ஜெட் என விமர்சித்தனர். சிலர் இது தேர்தலுக்கான பட்ஜெட் என விமர்சித்தனர்.
பட்ஜெட் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் பட்ஜெட். பட்ஜெட்டில் விவசாயம், ஊரக வளர்ச்சி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கதக்கது. பட்ஜெட் வளர்ச்சிக்கானது எனவும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது எனவும் ஆபரேஷன் கிரீன் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது.
பிரமாண்ட உணவுப்பூங்கா திட்டத்தால் தமிழகம் பயனடையும் எனவும் வேளாண்மை, ஊரக வளர்ச்சிக்காண திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை புறநகர் ரயில் பாதைகளை விரிவுப்படுத்தும் அறிவிப்பு வெளியாகவில்லை இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
#TamilNaduCM | EdappadiPalanisamy |#Budget2018 | #UnionBudget2018