தூத்துக்குடி சம்பவத்தில் வீடுகளை இழந்தோருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் -பொன்.ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி சம்பவத்தில் வீடுகளை இழந்தோருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். #Ponnathirakrishnan

Update: 2018-06-01 06:05 GMT
சென்னை

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்து பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சட்டப்பேரவையை புறக்கணித்து நாடகத்தன்மை நிறைந்த போலித்தனமான சட்டப்பேரவை ஒன்றை திமுக நடத்துவது ஏன்? மாதிரி சட்டப்பேரவையை திமுக கூட்டியதன் ரகசியம் என்ன?

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். சட்டமன்றத்தில் பங்கேற்றால் பொதுமக்கள் கேள்வி கேட்பார்கள் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதா என்றார். திமுகவும், அதிமுகவும் பரஸ்பரம் பேசிக் கொண்டு, சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துகின்றன. 

தூத்துக்குடியில் பயங்கரவாதிகள் பேருந்துக்கு தீ வைத்ததில், பெண் ஒருவர் உயிரிழந்தார். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.20 இழப்பீடு வழங்கியது பாராட்டுக்குரியது. தூத்துக்குடி சம்பவத்தில் வீடுகளை இழந்தோருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் 

ஆனால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று தமிழக அரசு கூறுகிறது. எனில், பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு வழங்குவது ஏன்? என பதிலளிக்க வேண்டும். 

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூற திமுக ஏன் தயக்கம் காட்டுகிறது. தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற விஷயங்கள் மக்களுக்கு சந்தேகங்களை எழுப்பியுள்ளன என்று  கூறினார். 

மேலும் செய்திகள்