கோபிசெட்டிபாளையம் அருகே சூறாவளி காற்றால் வாழை, தென்னை மரங்கள் சேதம்

கோபிசெட்டிபாளையம் அருகே சூறாவளி காற்று வீசியதில் வாழை மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன.#Hurricanewinds

Update: 2018-06-04 02:55 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் பருவ கால மாற்றம் காரணமாக சூறாவளி காற்று வீசியது. இதனால் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. மேலும், நாகதேவன்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள 100க்கும் அதிகமான தென்னை மரங்களும் சாய்ந்தன.

இதனால் அந்த பகுதி விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனா். இந்த  சூறாவளி காற்றால் அந்த பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கூரை வீடுகளின் மேற்பகுதி காற்றால் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் சூறாவளி காற்றில் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. இதனால் பல்வேறு இடங்களுக்கு மின் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டு இரவு முழுவதும் மின்சாரமில்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

மேலும் செய்திகள்