இந்தியாவில் முதல் திருநங்கை வழக்கறிஞரான சத்யஸ்ரீ

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ள திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவில் வழக்கறிஞராகப் பதிவு செய்யும் முதல் திருநங்கை ஆவார்.

Update: 2018-06-30 12:12 GMT
சென்னை

தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா, இந்தியாவிலேயே முதல் திருநங்கை வழக்கறிஞராக தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவுசெய்திருக்கிறார். 36 வயதான சத்தியஸ்ரீ சர்மிளாவுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடிதான் சொந்த ஊர் என்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே செங்கல்பட்டு நடராஜபுரத்தில் குடியேறினார். 

சேலத்தில் சட்டம் பயின்றுள்ளார். திருநங்கைகளுக்கான அங்கீகாரம் கிடைத்தபிறகே வழக்கறிஞர் பணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று, 11 ஆண்டுகளாகக் காத்திருந்து தற்போது அதை நிறைவேற்றியும் இருக்கிறார்.

தமது வழக்கறிஞர் பணியைப் பயன்படுத்தி தனது சமூகத்திற்கு சட்டரீதியான உதவி செய்து அவர்களை முன்னேற்றப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

வழக்கறிஞராக வேண்டும் என்பது என நீண்டநாள் கனவு . நான் நீதிபதியாக வேண்டும் என மூத்த நீதிபதிகள் வாழ்த்தியுள்ளனர். எனது திருநங்கை சமூகத்திற்காக சேவை செய்வேன். அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் முன்னேறும் காலம் இது. இந்திய அளவில் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி என கூறி உள்ளார்

மேலும் செய்திகள்