கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உள்ளது. #KarthiChidambaram

Update: 2018-07-23 11:24 GMT
சென்னை,

கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக்அவுட் நோட்டீஸ்” அனுப்பியது 

அந்த லுக் அவுட் நோட்டீசில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றால் அது பற்றி உடனே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில்  கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உள்ளது.

மேலும் செய்திகள்