கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜிடம் இருந்து ரூ. 1 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜிடம் இருந்து ரூ. 1 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-09-10 10:29 GMT

சென்னை,


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. மதுரை சிறையில் வைத்து இவரது அண்ணனை தாக்கியதாக, சிறைத் துறை பெண் எஸ்பி ஊர்மிளாவிற்கு மிரட்டல் விடுத்தார். எஸ்பி ஊர்மிளாவுக்கு போன் போட்ட புல்லட் நாகராஜன், பெண் அதிகாரியிடம் மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா, உங்கள் மேல் லாரி ஏறும் என அடுத்தடுத்து மிரட்டல் விடுத்தார்.

 இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்து புல்லட் நாகராஜன் மிரட்டியுள்ளார். மிரட்டல்கள் தொடர்ந்த நிலையில் இன்று அவரை போலீஸ் தேனியில் கைது செய்தது. புல்லட் நாகராஜிடம் இருந்து, ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டுகள், விளையாட்டு துப்பாக்கிகள் மற்றும் நீதிபதி பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளது. தொடர்ந்து போலீசார் புல்லட் நாகராஜிடம் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்