'மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும்'- அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-26 21:34 GMT

சென்னை,


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. 


இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு கடன் கொடுத்துள்ளோம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்