தமிழகம், கேரளாவில் அடுத்த 45 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 45 நாட்களுக்கு மழை, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Update: 2018-10-05 12:12 GMT
சென்னை

 தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 8 வரை பரவலாக மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும். தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 45 நாட்களுக்கு மழை, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்