தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!- வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

Update: 2018-11-01 07:05 GMT
சென்னை

சென்னையில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது. நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் மழை விட்டுவிட்டு தூறிக் கொண்டே இருந்தது.

தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 2 நாட்களுக்கு 3-ந்தேதி வரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்

இந்த நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். என கூறி உள்ளார்.

* காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்