வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்

வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

Update: 2018-11-08 09:18 GMT
சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

இலவசமாக வழங்கபட்ட இலவச டிவியை  சர்கார் படத்தில் எரிக்காதது ஏன்?   இலவச திட்டங்களை எதிர்ப்பது என்றால் டிவி போன்ற திட்டங்களையும் எதிர்த்து இருக்க வேண்டும்.   

வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது , நடுநிலைத்தன்மை இல்லை. சர்கார் படத்தை ஜெயலலிதா இருந்தபோது எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாக கருதலாம்.  சர்கார் திரைப்படத்திற்கு அரசியல்வாதிகள் வீண் விளம்பரம் செய்ய வேண்டாம்.

பணமதிப்பிழப்பு நாளை கறுப்பு நாளாகத்தான் எண்ண  தோன்றுகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்