மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் முழக்கத்துடன் ஜனவரி முதல் மக்களை சந்திப்போம் -மு.க.ஸ்டாலின்

மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் முழக்கத்துடன் ஜனவரி 3-ந்தேதி முதல் பயணம் மேற்கொள்வோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2018-12-24 07:30 GMT
சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. 

மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை உறுதி செய்துள்ள தி.மு.க., தேர்தலை எதிர் கொள்வதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, பூங்கோதை, கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அந்த பகுதி மக்களின் விவசாய கடன் மற்றும் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும். மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்  என முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்டது.

கூட்டம் முடிந்ததும்  தி.மு.க தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து ஜனவரி 3-ந்தேதி முதல் கிராம சபை கூட்டங்களை நடத்தி ஊராட்சி பகுதிகளில் திமுக பயணம் மேற்கொள்ளும் என கூறினார்.

மேலும் செய்திகள்