பெட்ரோல் விலை 7 காசுகள் குறைவு, டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Update: 2018-12-25 01:16 GMT
சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.70 பைசாவாக விற்பனையானது. அது நேற்று 22 பைசா குறைந்து ரூ.72.48 ஆக விற்பனையானது. இதேபோன்று சென்னையில் நேற்று முன்தினம் டீசல் லிட்டருக்கு ரூ.67.58 ஆக விற்பனையானது .நேற்று 20 பைசா குறைந்து ரூ.67.38 ஆக விற்பனையானது. இந்த ஆண்டில் இது தான் குறைவான விலையாகும்.

இந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.41 ஆக விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையில் இருந்து  எந்த மாற்றமும் இன்றி லிட்டருக்கு 67.38 காசுகளாக இன்று விற்பனையாகிறது. 

மேலும் செய்திகள்