தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை: வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24 % குறைவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24 சதவீதம் குறைவு. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Update: 2018-12-31 07:39 GMT
சென்னை,

சென்னை வானிலை  ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை 24 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. வடகிழக்கு பருவமழை பதிவான அளவு 34 செ.மீ. இது வழக்கத்தைவிட 24 சதவிகிதம் குறைந்துள்ளது. வானிலை நிகழ்வுகள் சாதகமாக இல்லாததே பருவமழை குறைவுக்கு காரணம் . எல் நினோ உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தள்ளிப்போனதால் மழை இல்லை.  4 புயல்களில்  காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்பட்டது. அதனாலேயே மழையின் அளவு குறைந்து உள்ளது.

சென்னையில் இயல்பைவிட 55 சதவீதம்  மழை குறைவாக பதிவாகியுள்ளது என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்