கொடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை; வீடியோ தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்- முதல்வர் பழனிசாமி

கொடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை; வீடியோ தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Update: 2019-01-12 07:18 GMT
சென்னை

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஏற்பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ ஆவணம் குறித்த புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது; அதனை வன்மையாக கண்டிக்கிறோம்

தவறான  செய்தி வெளியிட்டவர்கள், வீடியோ விவாகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது விரைவில் கண்டறியப்படும்.
கொடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

தமிழகத்தில் எந்த திட்டமும் கொண்டு வரக்கூடாது என்பது திமுகவின் நோக்கமாக உள்ளது. ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்குக்கான அடிப்படை வசதிகளை செய்ய தவறியவர் மு.க ஸ்டாலின். மக்களின் அடிப்படை வசதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .

பொங்கல் பரிசாக ரூ.1000 கொடுத்ததற்கு எதிராக  ஸ்டாலின் தனது கட்சியினரை கொண்டு வழக்குப்போட வைத்தார்.உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததற்கு காரணம் திமுக தான்.

திமுகவின் கிராம சபை கூட்டம் ஒரு அரசியல் நாடகம் .  ஸ்டாலினால் குறுக்கு வழியில் அரசை கவிழ்க்க முடியாது என கூறினார்.

மேலும் செய்திகள்