பெட்ரோல் விலை 8 காசுகள் குறைவு, டீசல் விலை 13 காசுகள் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-01-16 01:04 GMT
சென்னை, 

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல் விலையின் தாக்கம் வாகன ஓட்டிகளிடையே பெரிதாக தெரிவது இல்லை. புத்தாண்டு பிறந்ததையொட்டி, கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. 

பின்னர் 9-ந் தேதி வரை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10-ந் தேதி ஏறுமுகத்தை கண்ட பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்துள்ளது. அதாவது கடந்த 9-ந் தேதி 71 ரூபாய் 7 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் 10-ந் தேதி 40 காசு அதிகரித்து 71 ரூபாய் 47 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக ஏறுமுகம் கண்ட பெட்ரோல் விலை கடந்த 6 நாட்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து உள்ளது.


இதே போன்று, கடந்த 9-ந் தேதி 65 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் 10-ந் தேதி 31 காசு அதிகரித்து 66 ரூபாய் ஒரு காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.  தொடர்ந்து ஏறுமுகம் கண்ட டீசல் விலை கடந்த 6 நாட்களில் மட்டும் லிட்டருக்கு 2 ரூபாய் 37 காசு அதிகரித்து.  இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  8 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலை 13 காசுகள் அதிகரித்துள்ளது. 

சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73 ஆகவும், டீசல் 68.22-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதத்தில் சற்று இறங்கு முகத்தில் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது, ஏறத்தாழ ஒருவாரமாக உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்