ராகுல்காந்தியை பிரதமராக்க யாரும் தயாராக இல்லை -தம்பிதுரை

ராகுல்காந்தியை பிரதமராக்க யாரும் தயாராக இல்லை என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்து உள்ளார்.

Update: 2019-01-17 05:31 GMT
கோவை

கோவையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- 

பாரதீய ஜனதா தமிழகத்தில் காலூன்ற வழி இல்லை. தேர்தலில் வெற்றி பெற திமுகவும் காங்கிரசும் மாறிமாறி அதிமுக மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.

ராகுல்காந்தியை பிரதமராக்க  மம்தாபானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ்  உள்பட யாரும் தயாராக இல்லை என கூறினார்.

மேலும் செய்திகள்