ஆறுமுகசாமி ஆணையம் முன் துணை முதல் அமைச்சர் வருகிற 29ந்தேதி ஆஜராக உத்தரவு

ஆறுமுகசாமி ஆணையம் முன் துணை முதல் அமைச்சர் வருகிற 29ந்தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2019-01-22 11:39 GMT
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையத்தில் ஆஜரானார்.  மக்களவை எம்.பி. தம்பிதுரை இன்று ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தினை அளித்து உள்ளார்.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் விசாரணைக்காக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நாளைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கோரியுள்ளார்.

இதுபற்றி அவரது தரப்பில் விளக்க கடிதம் ஒன்று ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.  இதில் அவர், விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வழங்கும்படி கோரியுள்ளார்.  இதனை அடுத்து வருகிற 29ந்தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்