ஆசிரியர்களும், அரசும் எடுக்கும் முடிவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்; தமிழிசை பேட்டி

ஆசிரியர்களும், அரசும் எடுக்கும் முடிவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-01-30 01:55 GMT
சென்னை,

ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 22ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்வு நெருங்கும் நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் மாணவர்களை பாதிப்படைய செய்துள்ளது.  இதனால் மாணவர்கள், பெற்றோர் போராடும் ஆசிரியர்களுக்கு எதிராக மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களில் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  அவர்களது பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என பள்ளி கல்வி துறை அறிவித்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆசிரியர்களும், அரசும் எடுக்கும் முடிவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்