‘ரபேல்’ வழக்கில் தீர்ப்பு: பாதுகாப்பு, சட்டத்துறை மந்திரிகள் பதவி விலகி இருக்க வேண்டும் ப.சிதம்பரம் கருத்து

‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், புதிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2019-04-11 17:08 GMT
சென்னை, 

‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், புதிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘‘ரபேல் விமான பேரம் பற்றிய விசாரணையை தவிர்ப்பதற்கு பா.ஜ.க. அரசு எல்லா யுக்திகளையும் கையாளுகிறது. ஆனால் நீதி என்று ஒன்று இருக்கிறது. நீதியின் கரத்தில் இருந்து சில நேரங்களில் தப்பிவிட்டது போல் தோன்றலாம். இறுதியில் நீதியே வெல்லும். புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை மந்திரியும், சட்ட மந்திரியும் பதவி விலகியிருக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்