வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு மாலை 4.30 மணிக்கு ஒத்திவைப்பு

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Update: 2019-04-17 08:31 GMT
சென்னை,

வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு வருமானவரித்துறை அறிக்கை அனுப்பி இருந்தது. இதனையடுத்து வேலூர் தொகுதி தேர்தல் நேற்று ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தேர்தல் ரத்து செய்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஏசி சண்முகம், மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று காலை உயர் நீதிமன்றம் விசாரித்தது. 

அப்போது, ஏசி சண்முகம் தரப்பு வழக்கறிஞர்,  தவறிழைக்கும் வேட்பாளர் மற்றும் கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ரத்து காரணமாக மக்களின் வரிப்பணம் வீணாகிறது” என வாதிட்டார்.  தேர்தல் ஆணையம் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் மாலை 4.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளது. 

மேலும் செய்திகள்