தென்கிழக்கு வங்கக்கடலில் பானி புயல் உருவானது; சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் பானி புயல் உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-04-27 08:58 GMT
சென்னை,

இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருந்தது.  இதன்பின் வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பானி புயலாக இன்று உருவெடுத்துள்ளது.

இந்த புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் பரவலமாக கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள பானி புயலின் பெயரை வங்காளதேசம் சூட்டியுள்ளது.  இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை.  இதனால் தமிழகத்திற்கு மழை கிடைப்பது பற்றி நாளைக்கே தெரிய வரும்.

மேலும் செய்திகள்