என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது - கமல்ஹாசன் பேட்டி

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-17 03:36 GMT
சென்னை,

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாலையும், தலையும் கத்தரித்து போட்டால் யாரும் யாரையும் குற்றஞ்சொல்ல முடியும். பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். சரித்திரம் பதில் சொல்லும்.

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை. இது உருவான சர்ச்சை அல்ல. உருவாக்கப்பட்ட சர்ச்சை. கோட்சே குறித்து முன்பே பேசியுள்ளேன். தேர்தலில் வெற்றி நம்பிக்கை குறைந்ததால் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர்.

மெரினாவில் பேசியபோது கண்டுகொள்ளாத நிலையில் அரவக்குறிச்சியில் பேசியதை பெரிதுபடுத்தி விட்டனர். சூலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்திருப்பதிலும் அரசியல் உள்ளது. 

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது. கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை. பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால் முன்ஜாமின் கோரினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்