உள் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-05-28 11:56 GMT
சென்னை

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்