ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சார்பில் புகையிலை எதிர்ப்பு பேரணி

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பேரணி நடைபெற்றது.

Update: 2019-05-31 22:33 GMT
சென்னை,

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணிக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி முன்னிலை வகித்தார்.

இந்த பேரணியில் புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், புகையிலை பயன்படுத்தாமல் இருப்பவர்களை ஊக்குவிப்பது குறித்த பதாகைகளை ஏந்தியும் மருத்துவ, செவிலியர் மாணவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் பேரணியாக சென்றனர். இந்த பேரணி பல்லவன் இல்லத்தில் முடிவடைந்தது.

இதையடுத்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ நிருபர்களிடம் கூறியதாவது:-

புகையிலை பயன்படுத்துவதால், பயன்படுத்துபவர்கள் மட்டுமல்லாது அவர்களது அருகில் இருப்பவர்களும் பாதிப்படைகின்றனர். தமிழகத்தில் தற்போது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. இதன் மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் குணப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்