கோவில்களில் அனுமதியின்றி பார்க்கிங் கட்டணம்; நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு அனுமதியின்றி கோவில்களில் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2019-06-10 06:15 GMT
சென்னை,

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்துள்ள உத்தரவொன்றில், கோயில், சுற்றுலா தலங்களில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.  இதுபற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.

அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வாகன கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் பெற்றிருக்க வேண்டும்.  சட்டவிரோத கட்டண வசூலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்