நீட் தேர்வு: எடப்பாடி அருகே மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி அருகே, பாரதபிரியன் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-06-15 14:47 GMT
சேலம்,

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்‘ தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி நடந்தது. இதன் முடிவு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.  இதில் தோல்வி அடைந்ததால் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த நம்பிராஜன் மகள் வைசியா (வயது 17), தேனி மாவட்டம் தி.ஆண்டிப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகள் ரிதுஸ்ரீ (18) ஆகியோர்  தற்கொலை செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி மோனிஷாவும் (18). ‘நீட்‘ தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பாரதபிரியன் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  நீட் தேர்வில் தோல்வியடைந்து, மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் விரக்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  போலீசில் புகார் அளிக்காமல், உடலை அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்