தண்ணீர் தட்டுப்பாடு : கோவையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கோவையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-06-19 06:29 GMT
கோவை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் கோவையில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. 

திமுகவை சேர்ந்த ஏராளமானோர் காலி குடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்