தமிழகத்தின் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை கேட்டு ஜிஎஸ்டி கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும்- ஜெயக்குமார்

தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி நிதியை கேட்டு ஜிஎஸ்டி கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2019-06-21 06:12 GMT
சென்னை,

35ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.  மத்திய நிதி அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.  இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது போன்றவை விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்க உள்ளார்.

இதற்காக டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்கு வரவேண்டிய  ரூ.5 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிதியை கேட்டு ஜிஎஸ்டி கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரிலேயே அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அமைச்சர் சிவி.சண்முகம் சென்றார் என கூறினார்.

மேலும் செய்திகள்