ரூ.159 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

159 கோடி ரூபாய் மதிப்பிலான 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-04 05:58 GMT
சென்னை

தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் 5000 புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1001 கோடி ரூபாய் செலவில் 3381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 7 கோடி ரூபாய் செலவில் 137 வகையான உபகரணங்களை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மேலும் செய்திகள்