ஆயுள் கைதிகள் முன்கூட்டி விடுதலை: தமிழக அரசின் நிலைப்பாடு மாறுபடுவது ஏன்? ஐகோர்ட் கேள்வி

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறுபடுவது ஏன்? என நாளை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-07-31 08:41 GMT
சென்னை,

தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுவித்த அரசு சந்தர்ப்பவசத்தால் குற்றம் இழைத்தவரை விடுவிக்க மறுப்பதேன்? 10 ஆண்டுகளை நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டுமென அரசு முடிவெடுத்தால் அது அனைவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதே சமயம் செந்தில் எனும் ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க தமிழக அரசு எதிர்க்கிறது.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறுபடுவது ஏன்? என நாளை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்