ரூபாயின் மதிப்பு சரிவு: தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 உயர்வு

தங்கம் விலை கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையில் இருந்து வருகிறது. ஒரு நாள் விலை அதிகரிப்பதும், மறுநாள் குறைவதுமாக இருந்து வருகிறது.

Update: 2019-08-22 21:22 GMT
சென்னை,

சென்னையில் நேற்றுமுன்தினம் ஒரு கிராம் ரூ.3,594-க்கும், பவுன் ரூ.28,752-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்று உயர்ந்தது. முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.3,608-க்கும், பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.28,864-க்கும் தங்கம் நேற்று விற்பனையானது.

தங்கத்தை போலவே வெள்ளி விலை உயர்ந்துள்ளது. முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ.48.30-க்கும், கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.48 ஆயிரத்து 300-க்கு வெள்ளி நேற்று விற்பனை ஆனது.

உலக சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததே தங்கம் விலை அதிகரித்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்