தமிழகத்திற்கான மண்ணெண்ணெயை முழுமையாக வழங்க கோரிக்கை வைத்துள்ளேன் - அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்திற்கான மண்ணெண்ணெயை முழுமையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

Update: 2019-09-03 12:53 GMT
புதுடெல்லி,

டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கான மண்ணெண்ணெயை முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

அதனை தொடர்ந்து டெல்லியில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி தரவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். தமிழகத்திற்கு 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக வழங்க வேண்டும்.

3 ஆயிரம் ரேஷன் பொருள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ரேஷன் பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.  பருப்பு, பாமாயில் மானியத்தை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்