தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை மனு

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Update: 2019-09-30 14:35 GMT
சென்னை,

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார். தனது கோரிக்கை மனுவில், “ தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க வேண்டும். 

ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூரில் மத்திய அரசு நிதியுதவியுடன் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க வேண்டும்.  மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீத செலவில் கூட்டாக செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்.  கோவையில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும். உதான் திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே மாலை நேர விமான சேவை தொடங்க வேண்டும்

பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும்  ரூ.7,825 கோடியை விடுவிக்க வேண்டும். காவிரி மற்றும் அதன் பாசன வாய்க்கால்களை சீர்படுத்த நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு  ரூ.9,927 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். 

மேலும் செய்திகள்