தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு -இந்திய வானிலை மையம்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Update: 2019-10-14 09:29 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-

நீலகிரி, ஈரோடு, கோவை, சிவகங்கை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதனால் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்