தங்கம் விலை பவுனுக்கு ரூ.128 அதிகரித்தது : ஒரு பவுன் ரூ.29,280-க்கு விற்பனை

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற-இறக்கத்துடனேயே காணப்படுகிறது. ஒருநாள் விலை அதிகரிப்பதும், மறுநாள் விலை குறைவதுமாக ஒரு நிலையற்ற தன்மையிலேயே பயணித்து வருகிறது.

Update: 2019-10-14 23:00 GMT
சென்னை, 

சென்னையில் நேற்றுமுன்தினம் ஒரு கிராம் ரூ.3,644-க்கும், ஒரு பவுன் ரூ.29,152-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்று அதிகரித்தது. முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.3,660-க்கும், பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.29,280-க்கும் தங்கம் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. முந்தைய நாள் விலையை விட கிராமுக்கு 20 பைசா அதிகரித்து ரூ.49.30-க்கும், கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.49,300-க்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதுமே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்