மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: பீலா ராஜேஷ் கோரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-10-26 07:47 GMT
சென்னை,

பதவி உயர்வு வழங்க வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் 25-ந்தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அவசர அறுவை சிகிச்சை மற்றும் டெங்கு காய்ச்சல் சிகிச்சை தவிர வேறு எந்த மருத்துவ பணிகளிலும் அரசு மருத்துவர்கள் ஈடுபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் அவசரகால பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நேற்று தொடங்கிய மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்