இறந்த குழந்தையை எப்படி மீட்பது என வழிகாட்டுதல்கள் இருக்கின்றன -வருவாய் நிர்வாக ஆணையர்

இறந்த குழந்தையை எப்படி மீட்பது என வழிகாட்டுதல்கள் இருக்கின்றன என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2019-10-30 09:30 GMT
சென்னை

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை, எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

இறந்த குழந்தையை எப்படி மீட்பது என வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அதனைப் பின்பற்றினோம். உடற்கூராய்விலும் மருத்துவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றினர். சுஜித் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார். மாநிலப் பேரிடர் மீட்புத்துறை, தேசியப் பேரிடர் மீட்புத்துறை என அனைத்துத் துறையினரும் வேதனையுடன் பணியாற்றினர். பெற்றோர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதபடி அரசு பக்கபலமாக இருக்கிறது.

திறந்த ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும். குழந்தை இறந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்த பிறகே உடலை அவ்வாறு எடுத்தோம். களப்பணியாளர்கள் அவ்வளவு உழைத்தும் அவர்கள் மீது விமர்சனம் வருகிறது. 

சுஜித் இறந்த வேதனை எல்லோருக்கும் உண்டு. களப்பணியாளர்கள், தன்னார்வலர்களின் எந்த யோசனைகளையும் நாங்கள் அலட்சியம் செய்யவில்லை. இம்மாதிரியான விபத்துகள் நடைபெறாமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திலிருந்து பெற்ற படிப்பினைகள் மூலம் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். 

மேலும் செய்திகள்