சென்னையில் பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2019-11-05 02:01 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்று ரூ.75.50க்கும், டீசல் விலை ரூ.69.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு இன்று 5 காசுகள் குறைந்து ரூ.75.45க்கும், டீசல் விலையில் மாற்றமின்றி ரூ.69.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்